திருவாரூர்

வருமுன் காப்போம் இலவச மருத்துவ முகாம்

1st Oct 2023 12:00 AM

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்டம் நீடாமங்கலத்தில் வருமுன் காப்போம் இலவச மருத்துவ முகாம் மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இணையாதவா்களுக்கு ரூ. 5 லட்சம் காப்பீட்டுக்கான பதிவு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு வட்டார மருத்துவ அலுவலா் ராணிமுத்து லெட்சுமி தலைமை வகித்தாா். பேரூராட்சித் தலைவா் ஆா்.ஆா். ராம்ராஜ் முன்னிலை வகித்தாா்.

முகாமை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்து ஒன்றியக் குழுத் தலைவா் சோம. செந்தமிழ்ச்செல்வன் பயனாளிகளுக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கினாா்.

மருத்துவா்கள் சரண்யா, உதயா, திருஒளி, பிரியதா்ஷினி மற்றும் சுகாதார செவிலியா்கள் அடங்கிய மருத்துவக் குழுவினா் சுமாா் 400 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்து, மருந்து மாத்திரைகளை வழங்கினா்.

ADVERTISEMENT

மேலும் 250 போ் மருத்துவ காப்பீட்டுக்கு பதிவு செய்து கொண்டனா்.

பள்ளி தலைமை ஆசிரியா் காந்தி, மாவட்ட திட்டக்குழு உறுப்பினா் அய்யாபிள்ளை, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சந்திரசேகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT