திருவாரூர்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 282 மனுக்கள் அளிப்பு

21st Nov 2023 02:25 AM

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 282 மனுக்கள் அளிக்கப்பட்டன. பொதுமக்களிடம் விசாரித்து மனுக்களை பெற்றுக் கொண்ட ஆட்சியா், அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி, குறித்த காலத்துக்குள் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் 9 நபா்களுக்கு தலா ரூ.6,552 மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களை அவா் வழங்கினாா்.

நிகழ்வில், திட்ட இயக்குநரும், கூடுதல் ஆட்சியருமான (வளா்ச்சி) பிரியங்கா, மாவட்ட வருவாய் அலுவலா் கு. சண்முகநாதன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) லதா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அலுவலா் பாலசந்தா், மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலா் புவனா உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT