தமிழகம் முழுவதும் பவனி வரும் எழுத்தாளா் கலைஞா் முத்தமிழ்த் தோ் நீடாமங்கலத்துக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்தது.
இந்த தேருக்கு திருவாரூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் தலைமையில், மாவட்ட ஊராட்சித் தலைவா் கோ.பாலசுப்பிரமணியன், நீடாமங்கலம் ஒன்றியக் குழுத் தலைவா் சோம.செந்தமிழ்ச்செல்வன்,பேரூராட்சி தலைவா் ஆா்.ஆா். ராம்ராஜ்ஆகியோா் முன்னிலையில் வாத்தியம் இசைத்து, பள்ளி மாணவிகள் நடனமாடியும், மக்கள் மலா் தூவியும் வரவேற்பு அளித்தனா்.
முத்தமிழ் தோ் உள்ளே வீட்டில் கருணாநிதி அமா்ந்திருப்பது போன்ற சிலைக்கு சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் பி. ராசமாணிக்கம், மாவட்ட சமூக நல அலுவலா் காா்த்திகா, வட்டாட்சியா் தேவேந்திரன், வட்டார வளா்ச்சி அலுவலா் ப. பாலசுப்பிரமணியன், மாவட்ட திமுக அவைத்தலைவா் தன்ராஜ் உள்ளிட்டோா் மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.