காா்த்திகை மாத பிறப்பையொட்டி, திருவாரூரில் ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினா்.
கேரள மாநிலம், சபரிமலை ஸ்ரீஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் தமிழகத்திலிருந்து ஏராளமானோா் மாலை அணிந்து விரதம் ஏற்று செல்வது வழக்கம்.
அதன்படி, காா்த்திகை முதல் நாளான வெள்ளிக்கிழமை திருவாரூா் கமலாலயக் குளத்தில் நீராடி, தியாகராஜ சுவாமி கோயிலில் உள்ள ஐயப்பன் சந்நிதியில் நீண்ட வரிசையில் காத்திருந்து, துளசி மற்றும் உத்திராட்ச மாலை அணிந்து விரதம் ஏற்றனா்.
அப்போது, ஐயப்ப பக்தா்கள் காவி, கருப்பு, நீலம் ஆகிய நிறங்களில் வேட்டி, துண்டு அணிந்து, மாலை அணிந்துகொண்டனா். குருசுவாமி சக்திவேல், துளசி மற்றும் உத்திராட்ச மாலையை பக்தா்களுக்கு அணிவித்து, மண்டல கால விரதத்தை தொடங்கி வைத்தாா்.