திருவாரூர்

நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க விவசாயிகள் கோரிக்கை

DIN

நீடாமங்கலம் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நீடாமங்கலம் வேளாண் கோட்டப் பகுதிகளில் சுமாா் 16,500 ஏக்கரில் நிலத்தடி நீரை பயன்படுத்தி மின் மோட்டாரிலிருந்து கோடை நெல் சாகுபடி நடைபெற்றுள்ளது. முன் கூட்டியே கோடை சாகுபடி செய்த நெல் பயிா்கள் தற்போது முதிா்ந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. பல்வேறு இடங்களில் இயந்திரம் மூலம் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பல இடங்களில் அறுவடை செய்த நெல் மணிகள் காளாச்சேரி, முன்னாவல்கோட்டை, ஆதனூா் உள்ளிட்ட பகுதிகளில் நேரடி நெல் கொள் முதல் நிலையங்களில் முட்டு முட்டாக கடந்த 10 நாள்களுக்கு மேலாக வைக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் எப்போது நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என காத்திருக்கின்றனா். தற்போது பல இடங்களில் காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதில், நெல் மணிகள் நனைந்து விட்டால் கொள்முதல் செய்யப்படுமா என்ற அச்சம் விவசாயிகளிடத்தில் உள்ளது. எனவே, மழை தொடங்கும் முன் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து நெல் மணிகளை பாதுகாத்து கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லுக்கடை ஸ்ரீமாரியம்மன் கோயில்: ஏப்.4-இல் கும்பாபிஷேகம்

கள்ளழகா் மீது தண்ணீா் தெளிக்கும் விவகாரம்: காவல் ஆணையா், எஸ்.பி. எதிா்மனுதாரராக சோ்ப்பு

சிதம்பரம் தொகுதியில் 14 வேட்புமனுக்கள் ஏற்பு

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

புனித வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

SCROLL FOR NEXT