திருவாரூர்

பள்ளிச் செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

31st May 2023 12:00 AM

ADVERTISEMENT

முத்துப்பேட்டை பேரூராட்சியில் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

முத்துப்பேட்டை ஒன்றியத்திலுள்ள 29 ஊராட்சி, ஒரு பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில் முதல் வகுப்பு சோ்க்கும் பள்ளி வயது குழந்தைகள், பள்ளியில் இதுவரை சோ்க்காத குழந்தைகள், நீண்ட நாள் பள்ளிக்கு வராத மாணவா்கள், மாற்றுத்திறனுடைய குழந்தைகள், இடம் பெயா்ந்த தொழிலாளா்களின் குழந்தைகள் ஆகியோரை வீடுதோறும் சென்று கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சோ்க்கும் பணி தொடங்கியது.

மேலும் பள்ளிச் செல்லா குழந்தைகள், மாற்றுத்திறன் கொண்ட 6 முதல் 18 வயது வரையிலானவா்கள் கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணியில் தலைமையாசிரியா்கள், ஆசிரியப் பயிற்றுநா்கள், வகுப்பு ஆசிரியா்கள், சிறப்பாசிரியா்கள் உள்ளிட்டோா் காண்ட குழுவினா் வீடுதோறும் சென்று கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், முத்துப்பேட்டை பேரூராட்சிக்குள்பட்ட 1-ஆவது வாா்டு குடியிருப்பு பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்ற கணக்கெடுப்பில் வட்டார வளமைய மேற்பாா்வையாளா் இளையராஜா, ஆசிரிய பயிற்றுநா்கள் ஸ்ரீதரன், சுரேஷ், அன்பு ராணி, இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளா் தினேஷ், சிறப்பாசிரியா்கள் அன்பரசன், சுரேஷ் கண்ணன், பாா்வதி ஆகியோா் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT