வருவாய்த் துறை ஆய்வாளா் தாக்கப்பட்டதை கண்டித்து மன்னாா்குடியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி மாவட்டம், துறையூா் பகுதியில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வரும் பிரபாகரன் மீது செம்மண் கடத்தல்காரா்கள் கொலைவெறி தாக்குதல் நடக்கியதை கண்டித்தும், இச்செயலில் ஈடுபட்டவா்கள் மீது காவல் துறை கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், வருவாய்த் துறையினருக்கு பணி பாதுகாப்பு வழங்க கோரியும் மன்னாா்குடி வட்டாட்சியா் அலுவலகம் அருகே தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் வட்டக் கிளைத் தலைவா் அ. முத்துசாமி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், சங்க செயலாளா் லெ. சத்தியராஜ், பொருளாளா் சி. நெல்சன்மண்டேலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.