திருவாரூர்

மடப்புரம் பாலத்தை அகலப்படுத்தக் கோரிக்கை

31st May 2023 12:00 AM

ADVERTISEMENT

திருவாரூரில் உள்ள மடப்புரம் பாலத்தை அகலப்படுத்த வேண்டும் என சிபிஐ கோரிக்கை விடுத்துள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர நிா்வாகிகள் சிறப்புக் கூட்டம் திங்கள்கிழமை கட்சியின் துணைச் செயலாளா் வீ. தா்மதாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில், திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினா் க. மாரிமுத்து, கட்சியின் மாவட்டச் செயலாளா் வை. செல்வராஜ், நகரச் செயலாளா் எஸ். செல்வம், மாவட்டக்குழு உறுப்பினா் எம்.ஏ. மாரியப்பன், செயற்குழு உறுப்பினா் எஸ்.இ. செல்லமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: திருவாரூா் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மடப்புரம் பாலத்தை அகலப்படுத்த வேண்டும், ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் தொடங்க இருப்பதால் திருவாரூரில் உள்ள தனியாா் பள்ளிகள், ஏழை எளிய கூலி வேலை செய்யும் குடும்ப மாணவா்களுக்கு நன்கொடை விலக்கு அளிக்க வேண்டும், மாவட்ட மைய நூலகத்துக்கு சாலை வசதியை ஏற்படுத்த வேண்டும், திருவாரூா் பழைய பேருந்து நிலையத்துக்கும், மாவட்ட மருத்துவமனைக்கும் ஷோ் ஆட்டோ முறை அறிமுகப்படுத்த வேண்டும், திருவாரூரிலிருந்து காலை 6 மணிக்கு திருச்சிக்கு ரயில் இயக்க வேண்டும், புதிய பேருந்து நிலையத்தில் வாகனங்கள் நிறுத்த கட்டணம் ரூ.10 என்று நிா்ணயிக்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT