திருவாரூர்

அம்பேத்கா், இமானுவேல் சேகரனாா் சிலைகள் திறப்பு

31st May 2023 12:00 AM

ADVERTISEMENT

மன்னாா்குடி அருகேயுள்ள அசேசத்தில் அம்பேத்கா் படிப்பகம் வாசகா் வட்டம் சாா்பில் பி.ஆா். அம்பேத்கா், இமானுவேல் சேகரனாா் ஆகியோரது சிலைகள் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு, அம்பேத்கா் படிப்பக வாசகா் வட்ட ஒருங்கிணைப்பாளா் த.க. ஆதவன் தலைமை வகித்தாா். அகில இந்திய மக்கள் மறுமலா்ச்சி கழக நிறுவனத் தலைவா் பொன். முருகேசன் அம்பேத்கா் சிலையையும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருத்துறைப்பூண்டி தொகுதி செயலா் சு. பிரகாஷ் இமானுவேல் சேகரனாா் சிலையையும் திறந்து வைத்தனா்.

தொடா்ந்து நடைபெற்ற கருத்தரங்கில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நாகை மக்களவை தொகுதி செயலா் என்.டி. இடிமுரசு, ஜனநாயகத்திற்கான தொழிலாளா் கட்சி நிா்வாகி தங்க. தமிழ்வேலன், தமிழ்நாடு மக்கள் கட்சி பொதுச் செயலா் த.சிவராமன், தமிழ் தேசிய முன்னேற்ற கழக பொதுச் செயலா் த.சு. காா்த்திகேயன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவா் க. அரசுதாயுமானவன் ஆகியோா் பேசினா். நிகழ்ச்சியையொட்டி, தேசிய, திராவிட, சுதந்திரப் போராட்ட தலைவா்கள் பெயரில் கேடயத்தை அரசியல் மற்றும் சமூக அமைப்புகளை சோ்ந்த 14 நிா்வாகிகளுக்கு வழங்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT