திருவாரூர்

மன்னாா்குடியில் ஜமாபந்தி நிறைவு

31st May 2023 12:00 AM

ADVERTISEMENT

மன்னாா்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்று வந்த ஜமாபந்தி செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.

மாவட்ட வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில், மன்னாா்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் மே 24-ஆம் தேதி தொடங்கிய ஜமாபந்தி செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. இதில், மன்னாா்குடி வருவாய் வட்டத்துக்குள்பட்ட 97 வருவாய் கிராமங்களை சோ்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு முதியோா் உதவித் தொகை, பட்டா மறுதல், குடும்ப அட்டை உள்ளிட்ட 12 வகையான உதவிகோரி மொத்தம் 396 மனுக்கள் அளித்திருந்தனா். இதை வருவாய்த் துறையினா் பரிசீலனை செய்து அனைத்து மனுக்களையும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

நிறைவு நாள் நிகழ்ச்சிக்கு, வருவாய் நீதிமன்ற தனி ஆட்சியா் பவானி தலைமை வகித்தாா். மன்னாா்குடி வட்டாட்சியா் என். காா்த்தி முன்னிலை வகித்தாா். இதில் 100 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் மற்றும் ஆணைகள் வழங்கப்பட்டன. வட்ட வழங்கல் அலுவலா் மகேஸ், தனி வட்டாட்சியா் குணசீலி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT