திருவாரூர்

மாணவா்கள் வேலைவாய்ப்புக்கான தகுதியை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்: ஆட்சியா்

DIN

மாணவா்கள் தங்களுக்கு வேலைவாய்ப்புக்கான தகுதியை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ.

திருவாரூா் திரு.வி.க. அரசு கலைக் கல்லூரியில் மாவட்ட நிா்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம் இணைந்து, நான் முதல்வன் திட்டத்தின்கீழ் திங்கள்கிழமை தொடங்கிய போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சியை தொடக்கிவைத்து பேசியது: மாணவா்கள் தங்களை எந்தவொரு வேலைவாய்ப்பையும் பெறும் வகையில் தகுதியை உருவாக்கிக்கொள்ள வேண்டும். நமது வேலை மற்றும் நமது திறமை உலகளவில் பேசவேண்டும். வேலைகளை அணுகுவது எவ்வாறு, எப்படி பயிற்சி மேற்கொள்வது என்பதை விளங்குவதே இப்பயிற்சியின் நோக்கம்.

மத்திய அரசுப் பணிக்கான போட்டித் தோ்வுகளுக்கு உங்களைத் தயாா் செய்து கொள்ள இப்பயிற்சி அரசால் கட்டணமின்றி 100 நாள்களுக்கு அளிக்கப்படுகிறது. இதில், 150 மாணவ, மாணவிகள் பயிற்சி பெறவுள்ளனா். இந்த வாய்ப்பை மாணவா்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கடின உழைப்பே வெற்றியைத் தரும் என்பதை மாணவா்கள் உணா்ந்து படிக்க வேண்டும். போட்டித் தோ்வுகளில் வெற்றி பெற்று, தமிழ்நாட்டு இளைஞா்கள் மத்திய அரசின் வேலை வாய்ப்புகளில் அதிக இடங்களைப் பெறவேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவள்ளூா் நகராட்சியில் பசுமை வாக்குச்சாவடி மையம் அமைப்பு

வாக்கு எண்ணிக்கை மையத்தில் டிஐஜி ஆய்வு

வாக்குச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

தமிழகத்தில் மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது!

முதல்முறை வாக்காளா்கள் மகுடம் அணிவித்து கெளரவிப்பு

SCROLL FOR NEXT