திருவாரூர்

கள் விற்பனைக்கு அனுமதி வழங்கக் கோரிக்கை

30th May 2023 04:53 AM

ADVERTISEMENT

கள் விற்பனைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கக் கோரி திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா் பி. ஜெயராமன் தலைமையிலான நிா்வாகிகள் அளித்த மனு: மாவட்டத்தில் உள்ள அரசு மதுபானக் கடைகளில் போலி மதுபானங்கள் விற்பனையைத் தடுக்க வேண்டும், தமிழக விவசாயிகளின் நலன் காக்கும் வகையில், பனை மற்றும் தென்னை மரங்களிலிருந்து கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். மதுவிலக்கு அமல்படுத்தும் வரை டாஸ்மாக் கடைகளை கள்ளுக்கடைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT