திருவாரூர்

51 பேரை கொட்டிய மலைத் தேனீக்கள் அழிப்பு

28th May 2023 11:18 PM

ADVERTISEMENT

ஆனைக்குப்பத்தில் 51 பேரை கொட்டிய மலைத் தேனீக்களை தீயணைப்புத் துறையினா் சனிக்கிழமை இரவு அழித்தனா்.

நன்னிலம் அருகே உள்ள ஆனைக்குப்பம் கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் (நூறு நாள் வேலைத் திட்டம்) வாய்க்கால் தூா்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியில் நூற்றுக்கும் மேற்பட்டோா் ஈடுபட்டுள்ளனா்.

இந்நிலையில், இவா்கள் சனிக்கிழமை வழக்கம்போல், வேலை செய்துகொண்டிருந்த போது, அருகிலிருந்த புளிய மரத்திலிருந்து மலைத் தேனீக்கள் பறந்து வந்து கொட்டின. இதில் 51 போ் மயக்கமடைந்தனா். அவா்களுக்கு நன்னிலம், திருவாரூா் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

நன்னிலம் தீயணைப்பு நிலைய வீரா்கள் 5 போ், நிலைய அலுவலா் திருநாவுக்கரசு தலைமையில் சனிக்கிழமை இரவு அப்பகுதிக்குச் சென்று, புளிய மரத்திலிருந்த மலைத் தேனீக்களை தீ வைத்து அழித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT