திருவாரூர்

சட்ட விரோத மது விற்பனை: ஒரேநாளில் 49 போ் கைது

28th May 2023 12:00 AM

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்ற 49 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

திருவாரூா் மாவட்டத்தில் சட்ட விரோத மது விற்பனையைத் தடுக்க காவல்துறையினா் சிறப்பு அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனா். இதற்கென மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.பி. சுரேஷ்குமாா் உத்தரவின்படி 45 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, பல்வேறு இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மாவட்டம் முழுவதும் சனிக்கிழமை நடைபெற்ற சோதனையில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 49 போ் கைது செய்யப்பட்டனா். பின்னா், அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT