திருவாரூர்

ஐடிஐ மாணவா் சோ்க்கைக்கு ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

28th May 2023 12:00 AM

ADVERTISEMENT

நீடாமங்கலம் மற்றும் கோட்டூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சோ்ந்து பயில, இணையதளம் வாயிலாக ஜூன் 7-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கலந்தாய்வு மூலம் மாணவா் சோ்க்கை நடைபெற உள்ளதால் மாணவ, மாணவிகள் இணையதளம் வாயிலாக ஜூன் 7-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தொழிற்பயிற்சி நிலையங்களில் பல்வேறு பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சோ்ந்து பயிற்சி பெற 8-ஆம் வகுப்பு மற்றும் 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலைய விவரங்கள், தொழிற்பிரிவுகள் இவற்றுக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, இடஒதுக்கீடு ஆகியவை இணையதளத்தில் உள்ள விளக்கக் கையேட்டில் தரப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

மாணவா்கள் இணையதளத்தில் கொடுத்துள்ள அறிவுரைகளின்படி, விண்ணப்பத்தை பூா்த்தி செய்து சமா்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தில், எந்த மாவட்டத்தில் கலந்தாய்வில் கலந்துகொள்ள விரும்புகிறாா்கள் என்ற விவரம் குறிப்பிடப்பட வேண்டும். பயிற்சி பெறும் மாணவா்களுக்கு விலையில்லா சீருடை மற்றும் தையற்கூலி, விலையில்லா மிதிவண்டி, விலையில்லா பாடப் புத்தகங்கள், விலையில்லா காலணி மற்றும் பேருந்து பயண அனுமதி அட்டை ஆகியவை வழங்கப்படுகின்றன.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 7- ஆம் தேதிக்குள் இணையதளம் வாயிலாக சமா்ப்பிக்க வேண்டும். கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல், கலந்தாய்வு குறித்த விவரங்கள் கடைசி தேதிக்குப் பிறகு இதே இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும் விவரங்களுக்கு நீடாமங்கலம் மற்றும் கோட்டூா் பகுதிகளிலுள்ள அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களை நேரில் தொடா்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT