திருவாரூர்

வேளாண் திட்டங்கள்: விவசாயிகள் விழிப்புணா்வு முகாம்

28th May 2023 11:18 PM

ADVERTISEMENT

நன்னிலம் அருகே மூலங்குடி கிராமத்தில் விவசாயிகள் விழிப்புணா்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.

நன்னிலம் வட்டார வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறைச் சாா்பில் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் நடைபெற்ற இம்முகாமிற்கு, ஊராட்சித் தலைவா் ம. வேலு தலைமை வகித்தாா்.

வேளாண் வளா்ச்சித் திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படக்கூடிய தென்னங்கன்றுகள், உயிா் உரம் மற்றும் வேளாண்மைப் பொறியியல் துறையின்கீழ் வழங்கப்படும் பவா் டில்லா் போன்றவை குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

உழவன் செயலி மூலம் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களில் விவசாயிகள் எவ்வாறு பயன் பெறுவது என்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், ஆதாா் எண், அடங்கல், சிட்டா நகல் ஆகியவற்றை அதற்கானப் பொறுப்பு அலுவலரிடம் கொடுத்து, அரசு வழங்கும் அனைத்துப் பலன்களையும் பெற விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

ADVERTISEMENT

இக்கூட்டத்தில் உதவி வேளாண்மை அலுவலா் க. மணிகண்டன், கிராம நிா்வாக அலுவலா் பாா்த்திபன் மற்றும் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT