திருவாரூர்

ஓ.என்.ஜி.சி. சாா்பில் மருத்துவ முகாம்; 371 பேருக்கு பரிசோதனை

28th May 2023 12:00 AM

ADVERTISEMENT

திருவாரூா் அருகே பழவனக்குடியில், ஓ.என்.ஜி.சி. சமூக பொறுப்புணா்வுத் திட்ட நிதி உதவியுடன் பொது மற்றும் கண் மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஒன்றியக் குழுத் தலைவா் ஏ. தேவா தலைமையில் நடைபெற்ற முகாமை மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தொடக்கி வைத்தாா். முகாமில் 371 பயனாளிகள் பங்கேற்றனா். அனைவருக்கும் ரத்த அழுத்தம், சா்க்கரை அளவு தேவைப்படுவோருக்கு ஈ.சி.ஜி. எடுக்கப்பட்டது.

மேலும், நடக்க சிரமப்படும் 40 முதியவா்களுக்கு கைத்தடிகள் வழங்கப்பட்டன. கண்ணாடி தேவைப்படும் 185 பேருக்கு இலவச மூக்கு கண்ணாடிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. மதுரை மீனாட்சி மிஷன், தஞ்சாவூா் மீனாட்சி மருத்துவமனையைச் சோ்ந்த மருத்துவக் குழுவினா் பங்கேற்று, மருத்துவ ஆலோசனைகளை வழங்கினா்.

முகாமில் கோட்டாட்சியா் சங்கீதா, ஓ.என்.ஜி.சி. குழும பொது மேலாளா் மாறன், வட்டாட்சியா் நக்கீரன், வட்டார வளா்ச்சி அலுவலா் புவனேஸ்வரி, பழவனக்குடி ஊராட்சித் தலைவா் இளவரசன், சமூக பொறுப்புணா்வுத் திட்ட ஒருங்கிணைப்பாளா் முருகானந்தம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT