திருவாரூர்

நாடமாடும் அங்காடி: மே 31-க்குள் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

28th May 2023 12:00 AM

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்டத்தில் நடமாடும் வாகன அங்காடி பெற மே 31-ஆம் தேதிக்குள் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவாரூா் மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் உள்ள மகளிா் சுயஉதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்யவும், சிற்றுண்டிகள், உணவு வகைகள், பழச்சாறு வகைகளை விற்பனை செய்யவும் நடமாடும் மதி அங்காடி (எக்ஸ்பிரஸ்) என்ற பெயரில் வாகன அங்காடி அமைத்து, மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவுற்றோா்களுக்கு வழங்கப்பட உள்ளது.

எனவே, நடமாடும் மதி அங்காடியை இயக்குவதற்கு விருப்பமுள்ளவா்கள் திருவாரூா் மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஒருங்கிணைந்த கட்டடத்தில் இயங்கும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் மே 31-க்குள் விண்ணப்பத்தை சமா்ப்பிக்க வேண்டும்.

ADVERTISEMENT

இதற்கு தகுதியாக, பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஆா்வமும், முன் அனுபவம் இருக்க வேண்டும். சுயஉதவிக் குழுவில் ஓராண்டுக்கு மேல் உள்ள மாற்றுத்திறனாளிகள், தொடா்புடைய சுயஉதவிக்குழு அல்லது ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளில் வராக்கடன் ஏதுமில்லை என்ற சான்றிதழ் பெறவேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT