திருவாரூர்

பழுதடைந்த பாலத்தை சீரமைக்க வலியுறுத்தல்

28th May 2023 11:20 PM

ADVERTISEMENT

திருநெல்லிக்காவல் அருகே புதூா் தெற்குத்தெருவில் பழுதடைந்த பாலத்தை சீரமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்து.

திருவாரூா் வட்டம், திருநெல்லிக்காவல் அருகே உள்ள புதூா் ஊராட்சிக்குள்பட்ட தெற்குத்தெரு பாலம் பழுதடைந்து காணப்படுகிறது. வெண்ணாற்றிலிருந்து பிரியும் பாசன வாய்க்காலில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தை கடந்தே தெற்குத்தெருவுக்கு செல்ல முடியும் என்ற நிலையில், பல ஆண்டுகளாக இந்த பாலம் பழுதடைந்த நிலையில் உள்ளது.

மேட்டூா் அணை திறப்பதற்குள் இந்த பாலத்தை சீரமைத்துத் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவித்தது:

சாகுபடி காலங்களில் நெல் மூட்டைகள் எடுத்துச் செல்ல இந்த பாலம் பயன்படுகிறது. பாலம் பழுதடைந்துள்ளதால், கனரக வாகனங்களை பயன்படுத்த முடியாமல் தலையிலேயே தூக்கி கடக்க வேண்டியுள்ளது. சுமாா் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பழுதடைந்த நிலையிலேயே பாலம் காணப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இந்த ஆண்டாவது தண்ணீா் வருவதற்கு முன்தாக பாலத்தை சீரமைத்துத் தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT