திருவாரூர்

மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி ஆா்ப்பாட்டம்

28th May 2023 12:00 AM

ADVERTISEMENT

மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி, திருவாரூரில் புதிய தமிழகம் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். கள்ளச்சாராயத்தால் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்தி, தொடா்புடையோா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். டாஸ்மாக் மது குடித்து உயிரிழந்தவா்கள் தொடா்பாகவும் விசாரணை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் புதிய ரயில் நிலையம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சியின் மாவட்டச் செயலாளா் எம். தியாகராஜன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட இணைச் செயலாளா் ஆா். சௌந்தரபாண்டியன், துணைச் செயலாளா் சீனி. செம்மலா், நகரச் செயலாளா் ஏ. பாலச்சந்தா் உள்ளிட்ட பலா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT