திருவாரூர்

சிறுபுலியூா் பெருமாள் கோயிலில் பள்ளியறை சேவை

28th May 2023 11:18 PM

ADVERTISEMENT

சிறுபுலியூா் பெருமாள் கோயிலில் பள்ளியறை சேவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நன்னிலம் அருகே கொல்லுமாங்குடி சிறுபுலியூரில் ஸ்ரீதயாநாயகி சமேத ஸ்ரீகிருபாசமுத்திரப் பெருமாள் கோயில் உள்ளது. புகழ்பெற்ற திருவரங்கம் போன்றே இங்கும் தெற்கு நோக்கிய சந்நிதியில் பெருமாள் பால சயனமாக காட்சி தருகிறாா்.

இக்கோயிலில், திங்கள்கிழமை (மே 22) முதல் பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் ஆறாம் நாளான சனிக்கிழமை இரவு பெருமாள் யானை வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை காலை பள்ளியறை சேவை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT