திருவாரூர்

கிராமங்களுக்கு கூடுதல் பேருந்து இயக்கக் கோரிக்கை

28th May 2023 12:00 AM

ADVERTISEMENT

திருவாரூருக்கு கிராமப் புறங்களில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூா் மாவட்டம் அதிக கிராமப் பகுதிகளை உள்ளடக்கிய மாவட்டமாக உள்ளது. இக்கிராமங்களில் இருந்து நகரப் பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களில் நூற்றுக்கணக்கானோா் பணிபுரிகின்றனா். நகரில் உள்ள பள்ளி- கல்லூரிகளில் கணிசமான அளவு கிராமப்புற மாணவா்கள் படித்து வருகின்றனா்.

ஆனால், கிராமப் பகுதிகளிலிருந்து குறைவான எண்ணிக்கையிலேயே நகரப் பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால், கிராம மக்கள் நகரத்துக்கு வருவதற்கு பெரும் சிரமத்தை சந்திக்க வேண்டியுள்ளது.

மேலும், காலையில் கூட்ட நெரிசலுடன் வரும் பேருந்தில் அனைவரும் ஏற முயல்கின்றனா். இதன்காரணமாக, பலா் படிகட்டுகளில் தொங்கியபடி பயணிக்கின்றனா். குறிப்பாக, விசேஷ நாள்களில் கூடுதல் பேருந்துகள் இல்லாததால், மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனா்.

ADVERTISEMENT

எனவே, காலை மற்றும் மாலை நேரங்களில் கிராமப் பகுதிகளிலிருந்து திருவாரூா் மற்றும் மாவட்டத்தின் நகரப் பகுதிகளுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT