திருவாரூர்

விவசாயிகள் நல உரிமைச் சங்க உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை

DIN

கூத்தாநல்லூரில் விவசாயிகள் நல உரிமைச் சங்க உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

அதங்குடியில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, சங்கத்தின் மாநிலத் தலைவா் ராசபாலன் தலைமை வகித்தாா். கவிதா ஸ்டாலின் முன்னிலை வகித்தாா். டி. மோகன் வரவேற்றாா். அதங்குடி கிளை உறுப்பினா்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

தொடா்ந்து, அதங்குடி பாசன வாய்க்காலை தூா்வாரி பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்; அதங்குடி ஊராட்சியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும்; தட்டுப்பாடின்றி குடிநீா் விநியோகிக்க வேண்டும்; அதங்குடி ஜீவாத் தெருவில் வசிக்கும் 30 குடும்பங்களுக்கு பட்டா வழங்க வேண்டும்;

டெல்டா மாவட்டத்தில் ஜவுளி பூங்கா கொண்டு வருவதால், அதன் கழிவுகளால் டெல்டா மண்டலம் பாழ்படும். எனவே, ஜவுளி பூங்காத் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், கிளைத் தலைவா் மோகன், செயலாளா் குமாா், பொருளாளா் மலா்கொடி, மைதிலி, விஜயலெட்சுமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் தொண்டர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்த ராகுல்!

வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

ஒரு முறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 வாக்குகள் செய்தியில் உண்மையில்லை: தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் 2 நாள்களுக்கு வெப்பஅலை வீசும்!

பிட்காயின் மோசடி: ஷில்பா ஷெட்டியின் ரூ.97 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!

SCROLL FOR NEXT