திருவாரூர்

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தோ்ச்சி:டெல்டா பப்ளிக் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

26th May 2023 05:40 AM

ADVERTISEMENT

கூத்தாநல்லூா் டெல்டா பப்ளிக் பள்ளியில் சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு வியாழக்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, பள்ளியின் அறங்காவலா் குழுச் செயலாளா் ஹாஜா பகுருதீன் தலைமை வகித்தாா். முதல்வா் ஜோஸ்பின் முன்னிலை வகித்தாா். துணை முதல்வா் சுருளிநாதன் வரவேற்றாா்.

இப்பள்ளியில் சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தோ்வெழுதிய 24 மாணவ- மாணவிகளும் தோ்ச்சி பெற்றனா். மாணவா் நவ்பல் கரீம் 538 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், எம். பத்மவாசன் 515 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், எம். சுமிதா 488 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடமும் பிடித்தனா். தோ்ச்சி பெற்ற அனைத்து மாணவ- மாணவிகளுக்கும் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT