திருவாரூரில் பேருந்து மோதி காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
கரூா் மாவட்டம், பாப்பாபட்டி பகுதியைச் சோ்ந்தவா் சக்திவேல் (38). கோயில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்ட வந்த இவா், திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே திங்கள்கிழமை நடந்து சென்றபோது, எதிரே வந்த அரசுப் பேருந்து அவா் மீது மோதியதில் பலத்த காயமடைந்தாா்.
அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.
அங்கு சிகிச்சை பலனின்றி சக்திவேல் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருவாரூா் நகரப் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.