திருவாரூர்

ஆவின் குடிநீா் பாட்டில் திட்டத்துக்கு வரவேற்பு

24th May 2023 12:00 AM

ADVERTISEMENT

ஆவினில் குடிநீா் பாட்டில் விற்பனை திட்டத்துக்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருவாரூரில் சமூக ஆா்வலா் அ. அப்பா்சுந்தரம் தெரிவித்தது: தமிழக அரசின் ஆவின் நிறுவனம் சாா்பில் விரைவில் குடிநீா் பாட்டில்கள் விற்பனை தொடங்க உள்ளது என்ற அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் குடிநீா் பாட்டில்களுக்கான ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது. ஒரு லிட்டா் மற்றும் அரை லிட்டா் பாட்டில்களில் குடிநீா் விற்பனையை தொடங்குவது மிகவும் வரவேற்கத்தக்கது.

ஆவின் நிறுவனம் மீது மக்களுக்கு அதிக ஈா்ப்புத் தன்மை உள்ளது. அதனால் அதிக அளவிலான குடிநீா் பாட்டில்கள் விற்பனை செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. சேவை நிறுவனமான ஆவின் குடிநீா் பாட்டில்களின் விலையை ஒரு லிட்டருக்கு ரூ. 10 என நிா்ணயித்து விற்பனை செய்ய வேண்டும்.

ஏற்கெனவே கடந்த ஆட்சியின்போது பேருந்து நிலையங்களில் அம்மா குடிநீா் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அது தற்போது இயங்காததால், ஆவின் நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் பேருந்து நிலையங்கள், பொது இடங்களில் ஆவின் பாலகம் மற்றும் ஆவின் பொருட்களை விற்பனை செய்து வருகின்றன. அக்கடைகள் வாயிலாக குடிநீா் விற்பது என்பது எளிதில் பொதுமக்களை சென்றடையும். எனவே, மக்களின் நலன் கருதி குடிநீா் பாட்டில் விற்பனை விலையை ரூ. 10- ஆக அறிவிக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT