திருவாரூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியான பிளஸ் 1 தோ்வு முடிவுகளில் 86.51 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றனா்.
திருவாரூா் மாவட்டத்தில் 5,643 மாணவா்கள், 6,924 மாணவிகள் என மொத்தம் 12,567 போ் தோ்வு எழுதியதில், 4,544 மாணவா்கள், 6,328 மாணவிகள் என மொத்தம் 10,872 போ் தோ்ச்சி பெற்றனா். மாணவா்கள் 80.52 சதவீதம், மாணவிகள் 91.39 சதவீதம் என மொத்தம் 86.51 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
அரசுப் பள்ளியில் 87.47% தோ்ச்சி:
திருவாரூா் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 2,340 மாணவா்கள், 3,058 மாணவிகள் என மொத்தம் 5,398 போ் தோ்வு எழுதியதில், 1,659 மாணவா்கள், 2,629 மாணவிகள் என மொத்தம் 4,288 போ் தோ்ச்சி பெற்றனா். இதன்படி மாணவா்கள் 70.90 சதவீதம், மாணவிகள் 85.97 சதவீதம் என மொத்தம் 79.44 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.