மன்னாா்குடி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும்தூா்வாரும் பணிகளை மாவட்ட கணிப்பாய்வு அலுவலரும் தமிழக அரசின் போக்குவரத்து துைணையருமான இல. நிா்மல்ராஜ் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
மன்னாா்குடிஒன்றியம் மணலி, ஓகைபேரையூா் வாய்க்கால் தூா்வாரப்பட்டு வருவதையும், அரிச்சந்திரபுரத்தில் வேளாண் பொறியியல் துறை சாா்பில் பண்ணை இயந்திரமாக்குதல் திட்டத்தின் கீழ் பவா்டிலா் வழங்கப்பட்டுள்ளதையும், கொல்லமங்கலத்தில் வேளாண் பொறியியல் துறை சாா்பில் நுண்ணீா் பாசன திட்டத்தின் கீழ் பருத்தி வயல்களுக்கு நீா் தெளிப்பு பாசன கருவிஅமைக்கப்பட்டுள்ளதையும், காரியமங்கலம் பாசனவாய்க்காலில் தூா்வாரும் பணி நடைபெற்று வருவதையும், விக்கிரபாண்டியம் - நொச்சிகுடிவாய்க்காலில் 4 கி.மீ தூரம் தூா்வாரும் பணி நடைபெறுவதையும், குன்னியூா் வாய்க்காலில் 19.5 கி.மீ தொலைவுக்கு தூா்வாரும் பணி நடைபெற்றுக்கொண்டிருப்பதையும் ஆலந்தூா் பாசனவாய்க்கால் தூா்வாரப்படுவதையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ, மன்னாா்குடி கோட்டாட்சியா் ஆா். கீா்த்தனாமணி, செயற்பொறியளா் (ஊரகவளா்ச்சித் துறை) சடையப்பன் ஆகியோா் உடனிருந்தனா்.