திருவாரூா் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்திருப்பது:
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீா்க்கும் கூட்டம் 23-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
18 வயதுக்கு கீழ் உள்ளவா்களும் விண்ணப்பம் அளிக்கலாம். மனுதாரா்களின் கோரிக்கைகள் அனைத்தும் அரசின் விதிகளுக்குட்பட்டு பரிசீலிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும்.
மாற்றுத்திறனாளிகளின் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில், சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் மனுக்கள் வழங்கப்படும்.
வருகையின்போது இருப்பிட முகவரிக்கான ஆதாரம், குடும்ப அட்டை நகல், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் இரண்டு நகல்கள், தற்போதைய புகைப்படம் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். இதற்கு முன்னா் விண்ணப்பம் அளித்திருந்தால், அதற்கான ஆதாரம், தொடா்புடைய கடிதங்கள் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்.