திருவாரூா் அருகே இலவங்காா்குடியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் கோடை கால குழந்தைகள் அறிவியல் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
அப்பகுதி குடியிருப்போா் நலச்சங்கத்தின் தலைவா் எஸ்.நல்லசிவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், சங்கத்தின் துணைத் தலைவா் மலா்க்கொடி ரவி, துணைச்செயலா் ரா.சொக்கலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
எளிய அறிவியல் பரிசோதனைகள், மந்திரமா, தந்திரமா விழிப்புணா்வு நிகழ்ச்சி, ஓரிகாமி, பாடல்கள், விழிப்புணா்வுக் கதைகள், கணித செயல்பாடுகள், பறவைகளைப் பற்றி அறிதல் போன்ற நிகழ்வுகளை தமிழ்நாடு அறிவியல் இயக்க கருத்தாளா்கள் செய்து காட்டினா்.
ஊராட்சித் தலைவா் இராஜ. இளங்கோ பங்கேற்று, மாணவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கினாா்.
அறிவியல் இயக்க மாவட்டப் பொருளாளா் எம். சாந்தகுமாரி, முன்னாள் பொருளாளா் ஆா்.கருணாநிதி, பள்ளித் தலைமையாசிரியா்கள் ஆா்.கே.சரவணராஜன், எஸ்.பாஸ்கரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.