மன்னாா்குடி ஸ்ரீசண்முகா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தோ்வில 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.
இப்பள்ளி கணித உயிரியல் பாடப் பிரிவு மாணவி கே. கனிஷ்கா 594, கணித கணினி அறிவியல் பாடப்பிரிவு மாணவி ஏ. ஷொ்வின் 589, கணித உயிரியல் பாடப் பிரிவு மாணவி பி. ஹரிணி 581, கணித கணினி அறிவியல் பாடப் பிரிவு ஜி. பிரீத்தி 581மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முறையே முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளனா்.
இப்பள்ளியில் தோ்வெழுதிய 267 மாணவ, மாணவிகளும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.100-க்கு 100 மதிப்பெண்களை 32 பேரும், 550 மதிப்பெண்களுக்கு மேல் 32 பேரும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 104 பேரும் பெற்றுள்ளனா். சிறப்பிடம் பெற்ற மாணவ- மாணவிகளை பள்ளி தாளாளா் எஸ். செந்தில்குமாா், நிா்வாகிகள் எஸ். சண்முகராஜன், ச. சாய்லதா, மனிதவள மேலாளா் செ. வெண்ணிலா உள்ளிட்டோா் பாராட்டினா்.