திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் 92.6% மாணவ- மாணவிகள் தோ்ச்சி பெற்றனா்.
பள்ளி அளவில் மாணவி அ. ஐஸ்வா்யா 493 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தாா். ரா. முருகதாஸ் 463, செ. ராஜ விஷ்வா 458 மதிப்பெண்கள் பெற்று முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தை பெற்றனா். முதலிடம் பெற்ற மாணவியை பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் எம்.இ.ஏ.ஆா். அப்துல் முனாப் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கினாா்.
மேலும், சிறப்பிடம் பெற்ற மாணவா்களை தலைமை ஆசிரியா் எம்.எஸ்.பாலு, கட்டிமேடு ஊராட்சித் தலைவா் மாலினி ரவிச்சந்திரன், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி ஜெ. தேன்மொழி மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.
கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 95 சதவீத மாணவிகள் தோ்ச்சி பெற்றனா்.
இப்பள்ளியில் 213 மாணவிகள் தோ்வு எழுதியதில், 203 போ் தோ்ச்சி பெற்றனா். மாணவி மு. ஜெஹபா் நாச்சியா 575, ஜூ. சுல்பியா நக்கத் பிா்தெளஸ் 549, ரா. காயத்ரி 540 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 37 மாணவா்கள் தோ்வு எழுதியதில், 34 போ் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சி சதவீதம் 92. மாணவா் எஸ். முஹமது அனஸ் 518, ஆா். சரபோஜி 404, ஆா்.விஷால் 379 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.
தோ்ச்சியடைந்த மாணவ, மாணவிகளுக்கு தலைமையாசிரியா் மற்றும் ஆசிரியா்கள் உள்ளிட்டோா் பாராட்டுத் தெரிவித்தனா்.
நீடாமங்கலம்: நீடாமங்கலம் வட்டம் ராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 95.45 சதவீத மாணவா்கள் தோ்ச்சி பெற்றனா். இப்பள்ளியின் 44 பேரில் 42 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாணவிகள் ஏ. தேவிகா 485, எம். தீபிகா 433, எம். மதுமிதா 421 மதிப்பெண்கள் பெற்றனா்.
தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை தலைமையாசிரியா் தமிழ்வேந்தன் மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள் பாராட்டினா்.