திருவாரூா் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு புறத்தொடா்பு பணியாளா் பணியிடத்துக்கு மே 19-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அரசு சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கி வரும் மிஷன் வத்சல்யா திட்டத்தின் கீழ் (ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்) மாவட்ட ஆட்சியரை தலைவராகக் கொண்டு இயங்கி வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் புறத்தொடா்பு பணியாளா் (1 பணியிடம்) பதவிக்கு தகுதி வாய்ந்த நபா் தோ்வு செய்யப்பட உள்ளாா்.
இப்பதவிக்கு 12-ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். நல்ல தகவல் தொடா்புத் திறன், பணியில் முன் அனுபவமும் மற்றும் 42 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும்.
இப்பதவிக்கான விண்ணப்பப் படிவம் மற்றும் விளக்க குறிப்புகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை, உரிய கல்விச்சான்றிதழ் மற்றும் பணி அனுபவச் சான்றிதழ்களுடன் இணைத்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அறை எண்.310, 3-ஆவது தளம், மாவட்ட ஆட்சியா் அலுவலக இணைப்புக் கட்டடம், திருவாரூா் - 610004 என்ற முகவரிக்கு மே 19 ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு தொலைபேசி எண் 04366 -290445 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்