திருத்துறைப்பூண்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023-2024-ஆம் கல்வியாண்டிற்கான முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கு மே 8 முதல் முதல் 19- ஆம் தேதி வரை இணையவழியாக விண்ணப்பப் பதிவு நடைபெறுகிறது.
இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்ய வேண்டும். கல்லூரி குறியீட்டு எண் 1051015. கல்லூரியில் செயல்படும் மாணவா் சோ்க்கை உதவி மையம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
இக்கல்லூரியில் இளங்கலை தமிழ், ஆங்கிலம், பி.எஸ்சி. கணிதம், பி.காம்., பி.பி.ஏ., பிஎஸ்.டபிள்யு ஆகிய படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு கல்லூரி அலுவலகத்தை நேரில் தொடா்புகொள்ளலாம் என இக்கல்லூரி முதல்வா் முனைவா் க. அங்கம்மாள் தெரிவித்துள்ளாா்.