திருவாரூர்

கூத்தாநல்லூா் பேருந்து நிலையம் புதுப்பிக்கும் பணி தொடக்கம்

3rd May 2023 12:00 AM

ADVERTISEMENT

கூத்தாநல்லூா் பேருந்து நிலையம் புதுப்பிக்கும் பணிக்காக பழைய கட்டடத்தை இடிக்கும் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

கூத்தாநல்லூா் நகராட்சியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பேருந்து நிலையம் பழுதடைந்து, இடிந்து விழுந்த படியும், சமூக விரோதிகளுக்கு பயனாக, பொதுமக்களுக்கு பயனில்லாத வகையில் இருந்தது. பொதுமக்கள், அரசியல் பிரமுகா்கள், சமூக ஆா்வலா்கள் உள்ளிட்டோரின் வலியுறுத்தலில் பேருந்து நிலையம் புதுப்பிக்க ரூ. ரூ. 1.44 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

இதுகுறித்து, நகராட்சி ஆணையா் குமரிமன்னன் கூறியது: கலைஞா் நகா்புற மேம்பாட்டு திட்டம் 2022 - 2023 திட்டத்தின் கீழ் இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், பேருந்து நிலையம், 10 கடைகள், சைக்கிள் நிறுத்தம், பேருந்து நிலையத்திற்குள் சாலை வசதிகள் உள்ளிட்ட பணிகள் செய்யப்படவுள்ளன. பணிகள் விரைந்து தொடங்கப்படவுள்ள நிலையில், முதல் கட்டமாக பழைய கட்டடத்தை இடிக்கும் பணி தொடங்கியுள்ளது. இந்நிலையில், பேருந்து நிலையத்துக்குள் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், ரூ.36 லட்சத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பயணிகளுக்காக கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன. தவிர, இதே திட்டத்தின்கீழ் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தரம் பிரிக்கப்பட்டு ரூ.23 லட்சத்தில் நுண்ணுயீா் உர மையம் அமைப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன என்றாா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT