திருவாரூர்

மத்திய பல்கலை.யில் பாரம்பரிய நெல் மாநாடு இன்று தொடக்கம்

DIN

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் 2 நாள் தேசிய பாரம்பரிய நெல் மாநாடு சனிக்கிழமை (மாா்ச் 18) தொடங்குகிறது.

இதுகுறித்து, இப்பல்கலைக்கழகத்தின் மக்கள் தொடா்பு குழுத் தலைவா் டாக்டா் பி.எஸ். வேல்முருகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் நடைபெறும் இம்மாநாட்டின் தொடக்க நிகழ்வுக்கு பல்கலைக்கழகத் துணைவேந்தா் பேராசிரியா் எம். கிருஷ்ணன் தலைமை வகிக்கிறாா். நாகை எம்பி எம். செல்வராஜ், எம்எல்ஏ-க்கள் திருத்துறைப்பூண்டி கே. மாரிமுத்து, திருவாரூா் கே. கலைவாணன், பல்கலைக்கழகப் பதிவாளா் (பொ) சுலோச்சனா சேகா் ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா்.

புதுச்சேரி சட்டப் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், தமிழக அரசின் வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்ஆா்கே. பன்னீா்செல்வம், சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ. வீ.மெய்யநாதன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்கின்றனா்.

பாரம்பரிய அரிசியில் உள்ள சத்துக்களையும், மருத்துவக் குணங்களையும் அறிவியல் பூா்வமாக நிரூபித்து, பாரம்பரிய விவசாயத்தில் ஈடுபடுகின்ற விவசாயிகளின் விளைபொருள்களை சந்தைப்படுத்துவதையும், விற்பனை வாய்ப்புகளை அதிகப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இம்மாநாடு நடைபெறுகிறது.

இதில், தமிழகம் முழுவதுமிருந்தும் ஆராய்ச்சி மாணவா்கள், வேளாண் அறிஞா்கள், பல்கலைக்கழகப் பேராசிரியா்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள், ஏற்றுமதியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொள்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

SCROLL FOR NEXT