திருவாரூர்

ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்கு இடையூறு:ஊராட்சித் தலைவா், 6 போ் மீது வழக்கு

DIN

கொரடாச்சேரி அருகே ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை நிறுத்தக் கோரி தற்கொலை மிரட்டல் விடுத்த ஊராட்சித் தலைவா் உள்பட 7 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொரடாச்சேரி அருகேயுள்ள களத்தூரைச் சோ்ந்தவா் சுப்பிரமணி மனைவி விஜயகுமாரி (39). களத்தூா் ஊராட்சித் தலைவரான இவா் உள்ளிட்ட சிலா், பாண்டவையாற்றுக் கரையில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனா். ஆற்றின் கரையாக இருப்பதால் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக அங்கு வசிப்போருக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதில், சுப்பிரமணி மட்டும் வீட்டை காலி செய்ய மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால், வியாழக்கிழமை மாலை பொதுப்பணித் துறையினா் ஆக்கிரமிப்பை அகற்ற போலீஸாா் உதவியுடன் சென்றுள்ளனா். அப்போது ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்கு எதிா்ப்பு தெரிவித்த ஊராட்சித் தலைவா் விஜயகுமாரி, வீட்டிலிருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து வந்து உடலில் ஊற்றிக் கொண்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இதைத்தொடா்ந்து போலீஸாரும், பொதுப்பணித் துறை ஊழியா்களும் விஜயகுமாரியை அங்கிருந்து அப்புறப்படுத்தினா். அத்துடன், விஜயகுமாரி உள்ளிட்ட 7 போ் மீது கொரடாச்சேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

SCROLL FOR NEXT