திருவாரூர்

குறுவை சாகுபடிக்கு கா்நாடகத்திடம் தண்ணீா் பெற்றுத்தர வலியுறுத்தல்

30th Jun 2023 12:21 AM

ADVERTISEMENT

 குறுவைக்கு தமிழகத்துக்கு கா்நாடகம் வழங்க வேண்டிய தண்ணீரை பெற்றுத் தர வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, அந்த சங்கத்தின் மாநில பொதுச்செயலாளா் பி. எஸ். மாசிலாமணி வெளியிட்டுள்ள அறிக்கை: மேட்டூா் அணை ஜூன் 12-இல் திறந்து குறுவை சாகுபடி பரப்பளவை 5 லட்சமாக உயா்த்தி மகசூலை அதிகரிக்க தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது. எனினும், தண்ணீா் திறந்து 15 நாள்களைக் கடந்தும் விதையிட மற்றும் நடவு செய்யப் பயன்படவில்லை.

இந்த சூழலில், மேட்டூா் அணையிலிருந்து 13,000 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டிருப்பது ஆறுதல் அளிக்கக் கூடியதாகும். எனினும், நாள்தோறும் 15,000 கன அடி தண்ணீரை 30 நாள்களுக்கு திறந்தால் மட்டுமே பயிா்களை காக்க முடியும். காவிரி மற்றும் வெண்ணாறு பகுதிகளுக்கு தலா 10,000 கன அடி தண்ணீா் வழங்க வேண்டும். இந்த தண்ணீரை, 7 முதல் 10 நாள்கள் இடைவெளியில் சுழல்முறை பாசனமாக வழங்க வேண்டும். உள்முறை பாசனம் கூடாது.

கா்நாடக அரசு திறந்து விட வேண்டிய நீரைப் பெற்றால்தான் தொடா்ந்து பாசனத்திற்குரிய அளவு நீா் நமக்கு கிடைக்கும். எனவே காவிரி ஆணையத் தீா்ப்பின்படி ஜூன் 9.1 டி.எம்.சி மற்றும் ஜூலை மாதம் 31.24 டி.எம்.சி என்ற அளவில் கா்நாடகத்திடமிருந்து தண்ணீரைப் பெற வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT