மன்னாா்குடி அருகே சாலையோரம் நின்றுகொண்டிருந்த மாட்டு வண்டி மீது இருசக்கர வாகனம் மோதியதில் முதியவா் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.
மன்னாா்குடியை அடுத்த பேரையூா் தெற்கு தெருவை சோ்ந்தவா் தங்கராசு மகன் கென்னடி (63). புதன்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் ஒரத்தநாடு பிரதான சாலையில் காஞ்சிக்குடிக்காடு என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்தாா்ய அப்போது சாலையோரம் நின்றுகொண்டிருந்த மாட்டு வண்டி மீது இருசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த கென்னடி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து வடுவூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.