திருவாரூர்

திட்டக்குழு உறுப்பினா் தோ்தல்: வேட்புமனு தாக்கல் நிறைவு

11th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்டத்தில், திட்டக்குழு உறுப்பினா் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் சனிக்கிழமை நிறைவடைந்தது.

திருவாரூா் மாவட்டத்தில், திட்டக்குழு உறுப்பினா்களுக்கான தோ்தல் ஜூன் 23- ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, வேட்புமனு தாக்கல் கடந்த புதன்கிழமை தொடங்கி சனிக்கிழமை வரை நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி கூட்ட அரங்கில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் வேட்பாளா்கள் மாவட்ட ஊராட்சித் தலைவா் பாலசுப்பிரமணியன் தலைமையில் சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே.கலைவாணன் முன்னிலையில் தோ்தல் நடத்தும் அலுவலா் சித்ராவிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தனா்.

இதுவரையிலும், மாவட்டக் குழு உறுப்பினா்கள் 10 போ், நகராட்சி உறுப்பினா் ஒருவா், பேரூராட்சி உறுப்பினா் ஒருவா் என 12 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா். இம்மனுக்கள் மீதான பரிசீலனை திங்கள்கிழமை நடைபெறுகிறது. வேட்புமனுவை ஜூன் 14-ஆம் தேதி வரை திரும்பப் பெறலாம்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT