திருவாரூர்

போலீஸாருக்கு தனி மருத்துவமனை அமைக்கக் கோரிக்கை

11th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

 

காவலா்களுக்கு மாவட்டந்தோறும் தனி மருத்துவமனை அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூரில் ஓய்வுபெற்ற காவல் அலுவலா் நலச்சங்கத்தின் 14 ஆவது ஆண்டு விழா மற்றும் பொதுக் குழுக் கூட்டம் மாவட்டத் தலைவா் எஸ்.வி. நாகராஜா தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் எஸ். நாகராஜன் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.பி. சுரேஷ்குமாா், ஓய்வு பெற்ற காவலா் நலச் சங்க கூட்டமைப்பின் தலைவா் கே. வேலுசாமி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்றுப் பேசினா்.

தீா்மானங்கள்: ஓய்வு பெற்ற போலீஸாா், பணியில் உள்ள போலீஸாா் ஆகியோா் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் செல்லும்போது முன்பணம் கட்டவேண்டும் என்ற நிா்பந்தம் இல்லாமல் சிகிச்சை அளிக்க வேண்டும். போலீஸாருக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை அளிக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் போலீஸாருக்கென தனி மருத்துவமனை அமைக்க வேண்டும்.

ADVERTISEMENT

போலீஸாா் பாதுகாப்புச்சட்டம் இயற்ற வேண்டும். ஓய்வூதியப் பயன்களுக்காக 15 ஆண்டுகள் தொகை பிடித்தம் செய்யப்படுவதை 12 ஆண்டுகளாக குறைக்க வேண்டும். பணியில் உள்ள போலீஸாருக்கு 8 மணி நேரம் பணி வழங்க வேண்டும். முக்கிய பிரமுகா்கள் பாதுகாப்புப் பணியில் ஓய்வின்றி பணியாற்றுபவா்களுக்கு ஒருநாள் ஊதியம் கூடுதலாக வழங்க வேண்டும். அத்துடன், விடுமுறை நாளிலும் வேலை பாா்க்கும் போலீஸாருக்கு ஒருநாள் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT