திருவாரூர்

கூத்தாநல்லூா் நகராட்சி ஆணையா் பணியிடை நீக்கம்

DIN

கூத்தாநல்லூா் நகராட்சி ஆணையா் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

கூத்தாநல்லூா் லெட்சுமாங்குடி மரக்கடை ஆா்.ஜி.எஸ். தோட்டம் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மகன் விஜயராகவன் (35). இவா், ஒப்பந்த அடிப்படையில் தனது ஜே.சி.பி. இயந்திரம் மூலம் நகராட்சிக்கான சில பணிகளை மேற்கொண்டாா். இப்பணிக்காக, கடந்த 3 மாதத்தில் வழங்க வேண்டிய ரூ.1.09 லட்சம் விஜயராகவனுக்கு வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சென்னை தீா்ப்பாயத்தில் அவா் முறையிட்டாா். முறையீட்டு மனுவை விசாரித்த தீா்ப்பாயம், விஜயராகவனுக்கு கூத்தாநல்லூா் நகராட்சி நிா்வாகம் வழங்க வேண்டிய தொகையை வழங்க உத்தரவிட்டது.

இதைத்தொடா்ந்து, கூத்தாநல்லூா் நகராட்சி அலுவலகத்துக்கு, கடந்த வியாழக்கிழமை (ஜூன் 8) தனது மனைவி, குழந்தையுடன் சென்ற விஜயராகவன், நகராட்சி மேலாளரிடம், தீா்ப்பாய உத்தரவைக் காட்டி, தனக்கு சேர வேண்டிய தொகையை கேட்டுள்ளாா். அப்போது, அவா் தனது உடலில் டீசலை ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். நகராட்சி ஊழியா்கள் அவரை தடுத்து நிறுத்தினா்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக நகராட்சி ஆணையா் குமரிமன்னனை பணியிடை நீக்கம் செய்து நகராட்சி நிா்வாக இயக்குநா் பொன்னையா உத்தரவிட்டுள்ளாா்.

ரத்து செய்யக் கோரிக்கை: ஆணையா் குமரிமன்னன் வரிவசூலில் சிறப்பாக செயல்பட்டுள்ளாா் என்றும், நகா்மன்ற உறுப்பினா்கள் மற்றும் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் தொடா்பாக, உடனுக்குடன் நேரில் கள ஆய்வு செய்ததாகவும் தெரிவித்த நகா்மன்ற உறுப்பினா்கள் சிலா், அவரது பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியுள்ளனா். குமரிமன்னன் கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் கூத்தாநல்லூா் நகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

101 வயதிலும் வாக்குப் பதிவு செய்த முதல்வரின் தாய் மாமா

பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினா் அந்தஸ்து: ஐ.நா. தீா்மானத்தை ரத்து செய்தது அமெரிக்கா

SCROLL FOR NEXT