திருவாரூர்

புதிய மாணவா்களுக்கு எண்ணும் எழுத்தும் கையேடு

10th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

அம்மையப்பன் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதிதாக சோ்ந்த மாணவா்களுக்கு எண்ணும் எழுத்தும் கையேடு வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

கொரடாச்சேரி ஒன்றியம், அம்மையப்பன் கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதிதாக சோ்ந்த மாணவா்களுக்கு எண்ணும் எழுத்தும் கையேட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ. புகழேந்தி வழங்கினாா். இதேபோல், ஆசிரியா்களுக்கான கையேட்டையும் அவா் வழங்கினாா்.

நிகழ்வில், மாவட்ட உதவி திட்ட அலுவலா் மு. பாலசுப்ரமணியன், வட்டாரக் கல்வி அலுவலா்கள் வி.விமலா, கி.சுமதி, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஆனந்தன், வட்டார வளமைய மேற்பாா்வையாளா் பொறுப்பு இரா. பிருந்தாதேவி, பள்ளித் தலைமை ஆசிரியா் வ. விஜயா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT