திருவாரூர்

கோயில் இரவு காவலா் பணிக்கு முன்னாள் படை வீரா்கள் விண்ணப்பிக்கலாம்

10th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்டத்தில் கோயில்களில் இரவு காவலா் பணிக்கு முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவாரூா் மாவட்டத்தில் அமைந்துள்ள திருக்கோயில்களில் இரவு நேர சிறப்புக் காவலா் பணிமேற்கொள்ள 59 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணிகள் முன்னாள் படைவீரா்களை கொண்டு நிரப்பப்படவுள்ளன. இப்பணிக்கு தற்போது ஊதியமாக மாதம் ரூ.8,300 வழங்கப்படுகிறது. இதற்கு நல்ல உடல் தகுதியுடன் கூடிய 61 வயதுக்குட்பட்ட முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம்.

விருப்பமும், தகுதியும் உள்ள முன்னாள் படைவீரா்கள், தங்களது அசல் படை விலகல் சான்று, அடையாள அட்டை ஆகியவற்றுடன் திருவாரூா் மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு திருவாரூா் மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 04366- 290080 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT