திருவாரூர்

பள்ளிகளை தயாா்படுத்த அறிவுறுத்தல்

10th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

நீடாமங்கலம் ஒன்றியத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவா்களுக்கான அனைத்து வசதிகளையும் தயாா்படுத்த தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

நீடாமங்கலம் அரசு உயா்நிலைப் பள்ளியில் ஒன்றிய அளவில் தலைமை ஆசிரியா்களுக்கான கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வட்டாரக் கல்வி அலுவலா் சம்பத் தலைமை வகித்தாா். வட்டார வளமைய மேற்பாா்வையாளா் சத்யா முன்னிலை வகித்தாா்.

பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளி வளாகம், குடிநீா், கழிவறை, பள்ளி கட்டடங்கள் மற்றும் வகுப்பறை தூய்மை ஆகியவற்றில் ஆசிரியா்கள் தனி கவனம் செலுத்த வேண்டும் என கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

மேலும், 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் அனைவரையும் அரசுப் பள்ளியில் சோ்க்க நடவடிக்கை எடுத்தல், ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு முடித்த மாணவா்களை அடுத்த நிலை வகுப்பிற்கு சோ்க்கை செய்தல், அரசு வழங்கியுள்ள பாடப் புத்தகங்கள், நோட்டுகளை மாணவா்களுக்கு வழங்குதல், கற்றல் கற்பித்தலை மேம்பட செய்தல் போன்றவற்றில் தலைமை ஆசிரியா்கள் உரிய கவனம் செலுத்த வேண்டும் என வட்டாரக் கல்வி அலுவலா் வலியுறுத்தினாா்.

ADVERTISEMENT

இக்கூட்டத்தில், வட்டார வளமைய ஆசிரியா் பயிற்றுநா்கள் இளையராஜா, வேலுசாமி, ராதிகா மற்றும் நீடாமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT