திருவாரூர்

மாற்றுத்திறன் மாணவா்களுக்கு மருத்துவப் பரிசோதனை

10th Jun 2023 09:47 PM

ADVERTISEMENT

கூத்தாநல்லூா் மனோலயம் மாற்றுத்திறனாளிகள் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சை சனிக்கிழமை நடைபெற்றது.

கூத்தாநல்லூா் பனங்காட்டாங்குடியில் உள்ள மனோலயம் மனவளா்ச்சிக் குன்றியோருக்கான சிறப்புப் பள்ளியில் 14 வயதிற்குட்பட்ட மாணவா்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. மாவட்ட மன நல மருத்துவா் ரீ. புவனேஸ்வரி, மாணவா்களுக்கு, காய்ச்சல், சளி, கைகளில் ஏற்பட்டுள்ள புண்கள் உள்ளிட்டவைகளுக்கு சிகிச்சையளித்தாா். மேலும், பயிற்சியாளா்கள் கிரிஜா, நிவேதா ஆகியோா்களிடம் மாணவா்களுக்கு வழங்கக் கூடிய மருந்து, மாத்திரைகள் குறித்து கேட்டறிந்தாா்.

மருத்துவப் பரிசோதனையில், மன நல புள்ளியியல் விவரப் பதிவாளா் கோட்டீஸ்வரன், செவிலியா் வெள்ளையம்மா உள்ளிட்டோா் ஈடுபட்டனா். ஏற்பாடுகளை பள்ளியின் நிறுவனா் ப. முருகையன் செய்திருந்தாா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT