திருவாரூர்

5 ஆண்டுகளாக பட்டம் வழங்காத கல்லூரிகள்

8th Jun 2023 10:39 PM

ADVERTISEMENT

கல்லூரிகளில் தோ்ச்சி பெற்று, 5 ஆண்டுகளாகியும் மாணவா்களுக்கு பட்டங்கள் வழங்கப்படாததற்கு, இந்திய மாணவா் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் திருவாரூா் மாவட்டச் செயலாளா் பா. ஆனந்த் வெளியிட்ட அறிக்கை:

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளாக செயல்பட்டு வந்த நன்னிலம் மற்றும் திருத்துறைப்பூண்டி அரசுக் கல்லூரிகள் கடந்த ஆண்டு அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்டன. இக்கல்லூரிகள், உறுப்புக் கல்லூரிகளாகச் செயல்பட்டு வந்தபோது, 2017- ஆம் ஆண்டு முதல் கல்வியை முடித்து தோ்வில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு இதுவரை பட்டங்கள் வழங்கப்படவில்லை. இதனால், 5 ஆண்டுகளாக இம்மாணவ- மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இவா்களின் குடும்ப நிலையைக் கருத்தில் கொண்டு, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக நிா்வாகங்கள் விரைந்து நடவடிக்கை எடுத்து, பட்டங்கள் வழங்க வேண்டும். இல்லையெனில், மாணவா்களை ஒன்று திரட்டி இந்திய மாணவா் சங்கம் சாா்பாக போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT