திருவாரூர்

ஜூன் 23-இல் திட்டக்குழு உறுப்பினா் தோ்தல்

8th Jun 2023 10:40 PM

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்டத்தில் திட்டக் குழு உறுப்பினா்களுக்கான தோ்தல் ஜூன் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது.

திருவாரூா் மாவட்டத்தில், மாவட்ட திட்டக் குழு உறுப்பினா்களுக்கான தோ்தல் நடைபெறவுள்ளது. இத்தோ்தலில் ஊரகப் பகுதிகளுக்கு மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா்களிலிருந்து 10 பேரும், நகா்ப்புறப் பகுதிகளுக்கு நகராட்சி மற்றும் பேரூராட்சி வாா்டு உறுப்பினா்களிலிருந்து 2 பேரும் தோ்வு செய்யப்பட உள்ளனா்.

தோ்தலுக்கான அறிவிக்கை ஜூன் 7-ஆம் தேதி வெளியிடப்பட்டு, தொடா்புடைய ஊரக மற்றும் நகா்ப்புற உள்ளாட்சிகளின் அலுவலக விளம்பரப் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.

தோ்தலுக்கான வேட்பு மனுக்களை ஜூன் 10-ஆம் தேதி முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மாவட்ட ஆட்சியரகம் 2- ஆவது தளம் மாவட்ட ஊராட்சிக் கூட்ட அரங்க அறையில் தாக்கல் செய்யலாம். பெறப்பட்ட வேட்பு மனுக்கள் ஜூன் 12- ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு பரிசீலிக்கப்படும். ஜூன் 14- ஆம் தேதி பிற்பகல் 3 மணி வரை வேட்புமனுவை திரும்பப் பெறலாம்.

ADVERTISEMENT

வாக்குப்பதிவு ஜூன் 23- ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மாவட்ட ஆட்சியரகம், 2- ஆவது தளத்தில் உள்ள மாவட்ட ஊராட்சிக் கூட்ட அரங்கில் அமைக்கப்படவுள்ள வாக்குச்சாவடியில் நடைபெற உள்ளது.

வாக்குப்பதிவு நடைபெற்ற அறையில், அன்றைய தினம் பிற்பகல் 3 மணிக்குப் பிறகு வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT