திருவாரூர்

அதிமுக ஆட்சியில் மக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்பட்டன

8th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

அதிமுக ஆட்சியில் தமிழக மக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்பட்டன என்றாா் முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ்.

தனது நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதி நிதி ரூ. 5 லட்சம் செலவில் நெம்மேலியில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடையை திறந்து வைத்து பேசியது: பருவம் தவறி கடந்த மாதம் பெய்த கனமழையாலும், சில தினங்களுக்கு முன்பு காற்றுடன் பெய்த கனமழையாலும் பருத்திப் பூக்கள் மற்றும் காய்கள் கொட்டி பருத்தி விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனா். இந்த விவசாயிகளை பற்றி திமுக அரசு கண்டுகொள்ளவில்லை. உடனடியாக அதிகாரிகளை அனுப்பி பாதிக்கப்பட்ட பருத்தி விவசாயிகளைக் கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அதிமுக ஆட்சியில் மக்களுக்கு தேவையான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT