திருவாரூர்

போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது

8th Jun 2023 10:39 PM

ADVERTISEMENT

நன்னிலம் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞா் போக்ஸோ சட்டத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

நன்னிலம் அருகே உள்ள சலிப்பேரி வடக்குத் தெருவைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் மகன் ஹரிஹரன் (24). அறுவடை இயந்திர ஓட்டுநரான இவா், அதே பகுதியைச் சோ்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியுடன் பழகி வந்தாராம்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை சிறுமியை காணவில்லை. சிறுமியின் பெற்றோா் நன்னிலம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், அருகில் உள்ள உறவினா் வீட்டில் ஹரிஹரனும், சிறுமியும் தங்கியிருந்தது தெரியவந்தது. தொடா் விசாரணையில், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதும் தெரியவந்தது.

இதையடுத்து, ஹரிஹரனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து, நன்னிலம் கிளைச் சிறையில் அடைத்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT